செல்போன் சார்ஜ் போட்டபடியே தூங்கியதால் 90 வயது முதியவர் பலி

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (10:27 IST)
சென்னையில் செல்போன் சார்ஜ் போட்டபடியே தூங்கியதால் 90 வயது முதியவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் பகுதியை சேர்ந்தவர் ஹபிக் முகமது(90). இவர் தனது திருமணமான மகளுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் ஹபிக் முகமது இரவு வீட்டில் தூங்கும்போது தனது செல்போனில் சார்ஜ் போட்டபடி தூங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் சார்ஜரிலும், செல்போனிலும் தீ பற்றி எரிந்தது. 
 
இந்த கோர விபத்தில் ஹபிக் முகமதும் அவரது மகளும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து, தாம்பரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் சார்ஜ் போட்டபடி தூங்காதீர்கள் என எவ்வளவு கூறினாலும் இதனை பலர் கேட்காமல் இருப்பதே இதுபோன்ற விபத்திற்கான காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்