நைஜீரியா டேங்கர் லாரி விபத்தில் 9 பேர் பலி!

வெள்ளி, 29 ஜூன் 2018 (19:58 IST)
நைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
நைஜீரியா லாகோஸ் நகர் வழியாக நேற்று ஒரு லாரி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த லாரியில் இருந்த எண்ணெய் வெளியே கசிந்தது.
 
அந்த கசிவால் தீவிபத்து ஏற்பட்டு அருகில் உள்ள வாகனங்களுக்கு தீ பரவ தொடங்கியது. இதனால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த விபத்தில் 5 பேருந்துகள், 45 கார்கள் உள்ளிட்டவை நெருப்பில் கருகி நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்