ஓரினச்சேர்க்கை ஆசையால் நகைகளை இழந்த வாலிபர்

வெள்ளி, 29 ஜூன் 2018 (08:50 IST)
சென்னையில் ஒரு கும்பல் ஓரினச்சேர்க்கை விருப்பம் உள்ளவர்களை மோப்பம் பிடித்து அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை, செல்போன் ஆகியவைகளை கொள்ளை அடிக்கும் கும்பல் கடந்த சில மாதங்களாக அட்டகாசம் செய்து வருவதாக போலீசார்களுக்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் வாட்ஸ் அப்பில் ஓரினச்சேர்க்கைக்குக் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என ஒரு செல்போன் எண் அனுப்பப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஓரினச்சேர்க்கையில் பழக்கம் உள்ளவர் என்பதால் உடனே அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். 
 
பின்னர் அவர் ஒரு தனியார் ஓட்டலுக்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் கூல்டிரிங்க்ஸ் கொடுத்ததாகவும், அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அதனை குடித்து அவர் மயக்கம் அடைந்தவுடன் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் விலையுயர்ந்த செல்போன் கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் தெரிகிறது.
 
இதுகுறித்து அந்த வாலிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் உதவியாக் சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்