அதையடுத்து, அவரின் வீட்டில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் 2,00,248 ரூபாய் இருந்தது. அதில் 10 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது. எனவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவை அனைத்தும் 100 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பால் வாங்குவது, மளிகை வாங்குவது என குறைந்த செலவிற்கு மட்டுமே அவர் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி வந்துள்ளார்.
டெல்லியில் யாரையோ சந்தித்ததாகவும், அவர் அந்த நோட்டுகளை கொடுத்ததாக அவர் கூறியுள்ளர். ஆனால், இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றி அவர் எந்த தகவலும் கூறவில்லை. எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.