சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (15:50 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நாளை முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பலரும் பாதிக்கப்பட்டது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்பட பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் இதில் ஒரு சிலர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உள்பட 35 பொறியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த 35 பொறியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 5 நாட்களில் 35 பொறியாளர்களுக்கு பாதிப்பு என்பதை சென்னை  மாநகராட்சி உறுதி செய்துள்ளதாகவும் இதனால் மாநகராட்சி ஊழியர்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்