பக்ரீத் பண்டிகையின் போது விலங்குகளை பலியிட கூடாது - உயர் நீதிமன்றம்

வியாழன், 30 ஜூலை 2020 (19:51 IST)
கொரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையின்போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நாளை இந்தியாவில் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை. இந்நிலையில் தற்போது கொரொனா காலம் என்பதால்  சில தளர்வுகளுடன் அரசு பல்வேறு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
 
இந்த நிலையில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலங்குகளைப் பலியிட அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டு, அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்