10-12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (11:59 IST)
10ஆன் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வரும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் தனித்தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது.
 
10,11,12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் டிசம்பர் 26 முதல் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளை மாலை 5 மணி வரை மட்டுமே தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 5 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையிலும் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இது குறித்த மேலும் தகவல்கள் பெற வேண்டுமெனில் https://www.dge1.tn.gov.in/  என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்