ஜனவரி 5ஆம் தேதி தான் பள்ளி திறப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:57 IST)
அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
அரையாண்டு தேர்வு 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதியும் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்