சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்க் பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (07:59 IST)
ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 2023ம் ஆண்டு நடைபெறும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெறும்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறும்
ஒவ்வொருவரும் 10:30 மணிக்கு தொடங்கும் என்றும் 01.30 வரை தேர்வு நடைபெறும்
இந்த தேர்வு குறித்து மேலும் விபரங்கள் பெற cbse.gov.in, cbse.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும்.