3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Prasanth Karthick
புதன், 15 மே 2024 (18:18 IST)
தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து பணம் பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதால் PF பெறுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்து, அதற்கு நிகரான தொகையை பணியாற்றும் நிறுவனத்திடமிருந்தும் பெற்று வருங்கால வைப்புநிதி கணக்கில் வரவு செய்கிறது. இவ்வாறு வரவு செய்யப்படும் தொகையில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படுகிறது.

இந்த EPFO வில் வரவு வைக்கப்படும் தொகையை அதன் பயனாளர் மருத்துவ செலவு, உயர்கல்வி, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்காக முன்பணமாக பெறலாம். ஆனால் அதற்கு உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்து, வைப்பு நிதி அலுவலர் அங்கீகரித்த பின்னரே பணம் பெற முடியும். பணம் பெறும் வழிமுறைகள் காலதாமதத்தை ஏற்படுத்துவதாக பயனாளர்கள் கூறி வந்த நிலையில் அதற்கான வழிமுறைகளை தற்போது EPFO எளிமைப்படுத்தியுள்ளது.

ALSO READ: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

அதன்படி அவசர காரணங்களுக்காக ரூ.1 லட்சம் வரை முன்பணம் பெற விண்ணப்பித்தால், 3 நாட்களுக்குள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான உரிய ஆவணங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது தானியங்கி முறையில் பரிசீலனை செய்யப்பட்டு பணம் உடனடியாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளதால் வைப்புநிதி பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்