தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல் போட்டிகள் காரணமாக திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாகவும் இதனால் தெலுங்கானா மாநிலத்தில் பல திரையரங்குகளை தற்காலிகமாக மூட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒரே மாதத்தில் திரைப்படங்கள் வெளியாகி விடுவதால் திரையரங்குகளுக்கு பொதுமக்கள் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்தால் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவில் செலவாகிறது என்றும் அதற்கு பதிலாக வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு ஜாலியாக படம் பார்க்கும் வசதியை பொதுமக்கள் பெற்று விட்டதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களை மே 17ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு மூட முடிவு செய்திருப்பதாகவும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விட்டாலும் தேர்தல் மற்றும் ஐபிஎல் காரணமாக மிகக் குறைந்த அளவில் பார்வையாளர்கள் வருவதால் இந்த முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.