இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

Mahendran

புதன், 15 மே 2024 (17:48 IST)
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது முதல் கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த சட்டத்தின்படி 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு சமீபத்தில் இந்த சட்டம் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்ததாக அறிவித்தது. இந்த நிலையில் இந்த குடியுரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த குடியுரிமை சான்றுகளை மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ அஜய்குமார் என்பவர் 14 பேருக்கும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விண்ணப்பம் செய்த பலர் இந்த குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்