19 நாட்கள் ஆகியும் பதவியேற்காத எம்.எல்.ஏக்கள்: என்ன நடக்குது புதுவையில்?

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (15:43 IST)
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் மே இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் அம்மாநில முதல்வராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் புதுவையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 19 நாட்கள் ஆகியும் இன்னும் அம்மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 
புதுவை எம்எல்ஏக்களை பதவி ஏற்க விடாமல் பாஜக தடுப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களே இன்னும் பதவியேற்காத நிலையில் பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
எனவே விரைவில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. புதுச்சேரியில் தற்போது பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாஜக ஆட்சியை கைப்பற்ற திரைமறைவு வேலைகளை செய்து வருவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்