திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா: என்ன காரணம் தெரியுமா?

வெள்ளி, 21 மே 2021 (15:32 IST)
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது
 
இந்த நிலையில் மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற போதிலும் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் முதல்வராக பதவியேற்ற போதிலும் 6 மாதத்திற்குள் எம்எல்ஏவாக வேண்டும்
 
இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிபூர் என்ற தொகுதியை போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சொவந்திப் சேட்டர்ஜி என்பவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே தொகுதியில் தான் மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்