வயநாடு தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்..? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு?

Webdunia
சனி, 25 மார்ச் 2023 (15:21 IST)
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியான வயநாடு காலியான தொகுதியாக அறிவிக்கப்படும் என்றும் அடுத்த ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே ஜலந்தர் என்ற தொகுதி காலியாக இருக்கும் நிலையில் ஜலந்தர் மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளைக்கும் தேர்தல் தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வயநாடு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ராகுல் காந்திக்கு பதில் பிரியங்கா காந்தி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்