ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்குகளின் தண்டனை பெற்றவுடனே தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(3) என்ற பிரிவை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.