அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு 1 மாதம் கெடு!
சனி, 25 மார்ச் 2023 (14:33 IST)
எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அரசு பங்களாவை காலி செய்ய ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.
இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் நேற்று மக்களவை செயலாளர்,அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்கல், மக்கள் பிரதி நிதித்துவ சட்டதிதின்படி, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றால்,குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். எனவே, தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்குப் பின் மேலும் ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
நேற்று மக்களவை செயலகம், ராகுல்காந்தி போட்டியிட்டு வென்ற கேரளா வய நாடு தொகுதி காலியானதாக அறிவித்தது.
எனவே, பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்ட ராகுல்காந்தி, அரசு பங்களாவில் குடியிருக்க முடியாது. அதன்படி, தகுதி நீக்க உத்தரவு வெளியான 1 மாதத்திற்குள் அவர் அந்த பங்களாவை காலி செய்யய வேண்டுமென்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கூறியுள்ளளது.
இந்த நிலையில், ராகுல்காந்தி தன் மீதான தீர்ப்புக்கு தடை உத்தரவு பெறும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.