தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்த தொடங்கிய இந்த நேரத்திலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை உள்பட மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் காண மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருச்சி, கரூர், ராணிப்பேட்டை, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.