தீர்ப்பு வெளியான 2 மணி நேரத்தில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்: ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து வழக்கறிஞர்!

சனி, 25 மார்ச் 2023 (10:05 IST)
தீர்ப்பு வெளியான 2 மணி நேரத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்திருக்க வேண்டும் என மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி என்பவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலாளர் என்று அறிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘ராகுல் காந்திக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அவர்கள் செய்திருக்க வேண்டும்.
 
தகுதி நீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ளன என அன்று மாலையோ அல்லது அடுத்த நாள் காலையிலோ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதியிடம் வலியுறுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் தலைசிறந்த வழக்கறிஞர்கள் இருந்தும் மேல்முறையீட்டுக்கு செல்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்