மோடி-மம்தா சந்திப்பு: இருதுருவங்கள் சந்திப்பதால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (07:06 IST)
கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக  சாரதா நிதி முறைகேடு வழக்கு இருவருக்கும் இடையிலான மோதலை அதிகரித்தது. இந்த வழக்கில் கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் சுக்லாவை சிபிஐ கைது செய்ய முயற்சிப்பதும், அவர் தலைமறைவாகவிருப்பதும் தெரிந்ததே
 
 
இந்த நிலையில் நாளை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை அவருடைய அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியுதவியை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மேற்குவங்கத்தில் பாஜக பிரச்சாரம் செய்தபோது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சனை செய்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் மம்தாவும் அமித்ஷாவும் ஒருவரை ஒருவர் வார்த்தைப்போர் செய்து கொண்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திக்கவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
சாரதா நிதி முறைகேடு வழக்கு, குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு உள்ளிட்ட ஒருசில முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் மம்தா பானர்ஜி, மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தொடர்ந்து சிம்மசொப்பனமாக இருந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு இருவருக்கும் இடையே உள்ள பிணக்கை நீக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இனிமேலாவது மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்தி மாநில வளர்ச்சிக்கு தேவையான அதிக நிதியை முதல்வர் பெற்றுவர வேண்டும் என்பதே அம்மாநில மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்