மம்தா பானர்ஜி வங்கதேச பிரதமர் பதவிக்கு முயற்சிக்கலாமே? பாஜக எம்.எல்.ஏ

ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:15 IST)
அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு எடுத்த தேசிய குடிமக்கள் இறுதி பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. இந்த பட்டியலில் மொத்தம் 3.29 கோடி பேர் விண்ணப்பத்த நிலையில், 19 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் அசாம் மக்களிடையே கவலையும் பதற்றமும் காணப்படுகிறது.
 
இதனையடுத்து அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினார். 5 கிமீ நடைப்பயணமாக சென்ற இந்த பேரணியில் ஆரம்பம் முதல் இறுதி வரை மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். 
 
இந்த நிலையில் உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங் என்பவர் மம்தா பானர்ஜிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராடுவது ஓட்டுக்காகவே என்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் மக்களுக்காக போராடும் மம்தா பானர்ஜி, வங்கதேச பிரதமராக முயற்சிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இருந்து குடியேறிவர்களின் ஓட்டுக்காக மம்தா பானர்ஜி இந்த போராட்டம் செய்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்