தேர்தல் நாளில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:46 IST)
தேர்தல் நாளில் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்: மேற்குவங்கத்தில் பரபரப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 7ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்று கார்தா. இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் காஜல் சின்ஹா என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்த நிலையில் இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்ஹா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மேற்கு வங்க மாநிலத்தில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தொற்றால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்