சமையல்காரர், உதவியாளருக்கும் சொத்து.. ரத்தன் டாடா எழுதி வைத்த உயில்..!

Mahendran
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (14:13 IST)
சமீபத்தில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் ரத்தன் டாடா மறைந்த நிலையில், அவரது உயில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த உயில் செய்தியில், அவர் தன்னிடம் வேலை பார்த்த உதவியாளர், தனக்கு உணவு செய்து கொடுத்த சமையல்காரர் மற்றும் தனது வளர்ப்பு நாயை கவனித்துக் கொண்டவர்கள் உள்பட பலருக்கும் சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ரத்தன் டாட்டாவுக்கு 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன, அதில் பெரும்பாலானவை டாடா அறக்கட்டளைக்கு வழங்கப்படுமாறு உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், அவரது உதவியாளர் சாந்தன நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் சகோதரிகளுக்கும் சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். தன்னிடம் நீண்ட நாட்களாக வேலை பார்த்த ராஜன் ஷா என்பவருக்கும் சொத்துக்களை எழுதி, தனது வளர்ப்பு நாயையும் அவர் கவனிக்க வேண்டும் என்றும் அதற்கான செலவுகளை ஈடு செய்யும் வகையில் தனியாக சொத்துக்களை ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருந்த சுப்பையா என்பவருக்கும் ரத்தன் டாடா சொத்துக்களின் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ளார் என்று தெரிகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்