இந்த மூன்றும் தான் திமுகவை தாங்கி பிடித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி..!

Mahendran
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (14:05 IST)
அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்றும், திமுகவின் செல்வாக்கு தான் குறைந்துள்ளது என்றும், திமுகவை ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் கூட்டணி ஆகிய மூன்றும் தான் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளன என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேலும் பேசிய போது, பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி ஏழு சதவீதம் குறைந்துள்ளது என்றும், கூட்டணியை நம்பி மட்டுமே திமுக அரசு உள்ளது என்றும், ஆனால் அதிமுக யாரையும் நம்பி இல்லை என்றும் தெரிவித்தார்.

ஊடகமும் பத்திரிகையும் கூட்டணியும் தான் திமுகவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்றும், கூட்டணியை மட்டும் நம்பி திமுக தேர்தலை சந்திக்கிறது என்றும், தாங்கள் செய்த சாதனைகளை நம்பி  திமுக தேர்தலில் நிற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி பலத்தால் தான் வெற்றி பெற்றதாக முதலமைச்சர் பேசியுள்ளார் என்றும், கூட்டணி கட்சித் தலைவர்களே தற்போது திமுக அரசை விமர்சிக்க தொடங்கி விட்டதால் கூட்டணியில் விரிசல் என்று தானே அர்த்தம் என்றும் அவர் கூறினார்.
 
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்றும், இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும், திமுக என்பது ஒரு கட்சி அல்ல ஒரு கார்ப்பரேட் கம்பெனி; குடும்ப உறுப்பினர்களே திமுகவின் ஆட்சியாளராக அதிகாரத்துக்கு வர முடியும் என்றும் அவர் கூறினார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்