தமிழ்த்தாய் வாழ்த்தை தப்பு தப்பாய் பாடிய அரசு ஊழியர்கள்! உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன்!

Prasanth Karthick

வெள்ளி, 25 அக்டோபர் 2024 (13:31 IST)

சமீபத்தில் ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாய் பாடப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

 

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அதில் “திராவிட நல் திருநாடும்” என்ற வரிகள் நீக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஆளுநர் தனது அரசியலை தமிழ்த்தாய் வாழ்த்திலும் காட்டுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

 

இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. அதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய நிலையில் தவறாக பாடியதால் பரபரப்பு எழுந்தது. அதை சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின் மீண்டும் பாடுமாறு கேட்டுக் கொண்டார்.
 

ALSO READ: ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா..? எதற்கு இவ்வளவு கட்டணம்? - திருச்செந்தூர் கோவிலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
 

அவ்வாறாக மீண்டும் பாடியபோதும் ‘புகழ்மணக்க’ என்பதற்கு பதிலாக ‘திகழ்மணக்க’ என்று பாடினர். இதனால் உதயநிதி ஸ்டாலின் அதிருப்தி அடைந்தார். நிகழ்ச்சி முடிந்து வந்த உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து கேட்டபோது, தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்