ரூ.120 கட்டண சேவை ரூ.2000 ஆகிறது: திருமலை தேவஸ்தானம் முடிவு

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (13:12 IST)
திருப்பதியில் தற்போது 120 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வரும் சேவை 2 ஆயிரம் ரூபாயாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதேபோல் 240 ரூபாய்க்கு வழங்கப்படும் சேவை 2000 ரூபாய் ஆகவும், விஐபி தரிசன டிக்கெட் தற்போது 500 ரூபாயாக இருக்கும் நிலையில் அதை ஆயிரம் ரூபாய் ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது சுப்ரபாதம் டிக்கெட் ஒன்றின் விலை 120 ரூபாயாக இருக்கும் நிலையில் அது 2000 ரூபாய் ஆகவும், தோமாலை மற்றும் அர்ச்சனை ஆகிய கட்டண சேவை டிக்கெட்டுகள் தற்போது 240 ரூபாயாக இருக்கும் நிலையில் அவற்றை 2000 ரூபாய் ஆக மாற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது
 
அதேபோல் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட் கட்டணம் தற்போது 500 ரூபாயாக இருக்கும் நிலையில் அதை ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்