உக்ரைன் - இந்தியா: விமான கட்டணம் மூன்று மடங்கு உயர்வு!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:02 IST)
உக்ரைனில் இருந்து இந்தியா வருவதற்கான விமான கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் வருத்தம். 

 
உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
 
இந்நிலையில் பல்வேறு விமானங்களில் உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அவசரமாக நாடு திரும்பி வருகின்றனர். கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் இந்தியாவில் முழுவதுமாக அனுமதிக்கப்படவில்லை. அதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணம் தற்போது அதிகரித்துள்ளதாம். 
 
அதாவது ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரமாக அதிகரித்து உள்ளதாம். இது வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்