கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் தற்போது நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு திருப்பதி முழுவதும் உள்ள தனியார் உணகங்களை முற்றிலும் மூடிவிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான திட்டம் மூலம் முழுமையாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருச்சியிலிருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. இந்த விமான சேவைக்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.