ஆசிரியர் தகுதி தேர்வில்… முதலிடம் பிடித்த மாணவருக்கு ஜனாதிபதி பெயர் தெரியவில்லை!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (17:14 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 69 ஆயிரம் உதவி ஆசிரியர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றன. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்ரம் ஒட்டுமொத்தபணி நியமனத்தையும் தேர்வுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இத்தேர்வில் தேச்சி பெற ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட்டதாக புகார் எழுந்தன.

இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார் 10 பேரைக் கைது செய்தனர். அதில் ஒருவர் தர்மேந்திர படேல்,.. இவர்தான் ஆசிரியர் தகுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

இவரிடம் விசாரித்த போலீஸார் இந்தியாவின் ஜனாதிபதி பெயரைக் கேட்டுள்ளன்னர். அவருக்கு தெரியவில்லை.இந்நிலையில்,  ஆசிரியர் தேர்வு நியமன ஊழலை விசாரிக்க தனிப்படை அமைத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்