தினசரி 400 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி: உதவ முன்வந்த டாடா ஸ்டீல் !!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:07 IST)
கொரோனா நோயாளிகளுக்காக தினசரி 400 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர தயாராக உள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இம்மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை கொண்டு செல்ல பசுமை வழிதடத்தில் “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதனிடையே டாடா ஸ்டீல் நிறுவனம், கொரோனா நோயாளிகளுக்காக தினசரி 400 டன் வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் முக்கியமாந்து என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதற்காக பல்வேறு மாநில அரசுகளுக்கு 300 முதல் 400 டன் வரை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்