100 டன் ஆக்ஸியன் சிலிண்டர்கள் தந்து உதவும் ரிலையன்ஸ் நிறுவனம்

வியாழன், 15 ஏப்ரல் 2021 (20:21 IST)
மஹராஷ்டிராவில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவன இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழக்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

இந்நிலையில், இந்தியாவிலேயே மஹராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 1,-9,10 ,11 ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்த நிலையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே மாத இறுதியிலும், 10 ஆம் வகுப்பு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மஹராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மஜாராஷ்டிர மாநிலத்தில் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மாநில அரசு தெரிவித்த நிலையில் 100 டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இலவசமாகத் தருவதாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்