பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கில் தளர்வு: கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (09:30 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நாட்டில் எந்த பகுதியிலும் திருவிழாக்கள் சமூகம் கூட்டங்கள் அரசியல் கூட்டங்கள் நடத்த கூடாது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு மூன்று நாட்கள் ஊரடங்கில் தளர்வு அளித்தது. ஜூலை 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளை தளர்த்தி முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டார்
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள கேரளாவில் தளர்வுகளை தளர்த்தி மக்களின் வாழ்வுடன் அரசு விளையாடுகிறது என்றும் அந்த தளர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது கேரள அரசு உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் 18 முதல் 20 வரையிலான ஊரடங்கு தளர்வு முடிவடைந்த பின்னர் இந்த மனு விசாரணைக்கு வருவதில் என்ன பயன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்