பக்ரீத் கொண்டாட்டத்திற்கு உத்தரபிரதேச அரசு நிபந்தனை!

செவ்வாய், 20 ஜூலை 2021 (07:59 IST)
இந்தியா முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம் நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் உத்தரப்பிரதேச அரசு பக்ரீத் கொண்டாட்டத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. பக்ரீத் கொண்டாட்டத்தின்போது உத்தரப் பிரதேச மாநில முதல்வர் விதித்துள்ள நிபந்தனை காரணமாக அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் பக்ரீத் கொண்டாட்டத்திற்கு ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய நிலையில் அதற்கு நேர்மாறாக உத்தரபிரதேச மாநிலத்தில் பக்ரீத் கொண்டாட்டத்தில் கூடுதல் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பக்ரீத் கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட்டமாக இருக்கக் கூடாது என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் குர்பானிக்காக மாடுகள் அல்லது ஒட்டகங்களை வெட்ட கூடாது என்றும் பொது இடங்களில் குர்பானி நிகழ்வுகள் நடத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்
 
இதனிடையே பக்ரீத் கொண்டாட்டங்களுக்காக விதிமுறைகளை கேரள அரசு தளர்த்தியது தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்