கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடை: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (07:49 IST)
கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டு நிலையில் இருந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை வகுப்புகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளன.
 
இதுகுறித்த வழக்கு கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் நடந்தபோது கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் திபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு இன்று இந்த வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்