ஆங் சான் சூகியின் சிறைத் தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிப்பு

புதன், 12 அக்டோபர் 2022 (18:49 IST)
மியான்மர் நாட்டின் அரசியல் தலைவர் ஆங் சான் சூகியின் சிறை தண்டனை 26 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மியான்மரின் நடந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகள் போராட்டம் நடத்திய 77 வயது ஆங் சான் சூகி தற்போது சிறையில் உள்ளார் என்பது ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
ஊழல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஆன் சாங் சூகி சிக்கியதாகவும் அந்த வழக்குகளில் அளிக்கப்பட்ட சிறை தண்டனையின்  மொத்த எண்ணிக்கை 26 ஆண்டுகள் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே 77 வயதாகி உள்ள ஆன் சாங் சூகி 26 ஆண்டுகள் இன்னும் சிறையில் இருக்க வேண்டும் என்ற தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்