புதிய நாடாளுமன்றம்; அடிக்கல் நட இருந்த பிரதமர்! – முட்டுக்கட்டை போட்ட உச்சநீதிமன்றம்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (11:19 IST)
இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாராளுமன்றம் 1927ல் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய பாராளுமன்றம் கட்ட வேண்டும் என்ற பேச்சு எழுந்து வந்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 10ம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளை தொடங்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாக செய்திகள் வெளியானது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள நீதிமன்றம், அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி 10ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்துவதில் தாமதங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்