இந்தியாவில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ள நிலையில் பல மாநிலங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் பிரபலமும், நடிகையுமான விஜயசாந்தியும் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இதுகுறித்து பாஜக தெலுங்கானா தலைவர்களோடு ஆலோசித்துள்ள விஜயசாந்தி நாளை அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் காங்கிரஸில் இருந்த நடிகை குஷ்பூ பின்னர் பாஜகவில் இணைந்தார். மேலும் 1997ல் விஜயசாந்தி அரசியல் பயணம் தொடங்கியபோது பாஜகவில்தான் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.