புதிய நாடாளுமன்றக் கட்டடம்:நரேந்திர மோதி 10-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் - ரூ. 971 கோடி செலவு

சனி, 5 டிசம்பர் 2020 (22:39 IST)
புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
 
இத்தகவலை, நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
 
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமைந்திருக்கும் என்று ஓம் பிர்லா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
 
இந்தக் கட்டுமானப் பணியில் நேரடியாக 2 ஆயிரம் பேரும் மறைமுகமாக 9 ஆயிரம் பேரும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த கட்டடத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தைவிட 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரியது.
 
இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டில் நாடாளுமன்றக் கூட்டம் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று நம்புவதாகவும் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்