ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கும் தேதி அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 12 செப்டம்பர் 2024 (10:38 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையின் போது சபரிமலையில் நடை திறக்கப்படும் என்ற நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது ஆண்டாண்டு காலமாக வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கேரளாவில் செப்டம்பர் 15ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளை பூஜை எதுவும் நடைபெறாது என்றும் நாளை மறுநாள் அதிகாலை முதல் பூஜைகள் நடைபெறும் என்றும் 15 ஆம் தேதி சிறப்பு திருவோண பூஜை நடைபெறும் என்றும் சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 15, 16 ஆகிய இரண்டு நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ஓணம் விருந்து வழங்கப்படும் என்றும் 16ஆம் தேதி மாத வழிபாடு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்றும் தினந்தோறும் பூஜைகள் நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்