சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

Mahendran

திங்கள், 20 மே 2024 (18:03 IST)
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில்  பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து  ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத ஏலக்காய் வழங்க வேண்டும் என்ற விதிகளுடன் புதிய டெண்டரை தேவசம் போர்டு விடுவித்துள்ளது. இதனையடுத்து இந்த டெண்டரை எடுக்க ஏலக்காய் உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்