மருந்து, மாத்திரையில் கருகலைப்பு: வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்!!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (16:46 IST)
டெல்லியில் இயங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கவுன்சில், கட்மாசர் நிறுவனம், கருக்கலைப்பு மாத்திரை நிறுவனம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் கர்ப்பிணிகள் குறித்தும், கருக்கலைப்பு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
 
இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரை மூலம் 1 கோடியே 27 லட்சம் பேர் கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மேலும், 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு இல்லாத வகையில் நாட்டு மருத்துவம் மூலம் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்கள் பெரும்பாலானோர் யாருக்கும் தெரியாத வகையில் கருக்கலைப்பு செய்வதையே விரும்புகின்றனர். வீரியம் மிகுந்த மருந்து மாத்திரைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கருக்கலைப்பு அதிக அளவில் நடக்கிறது. 
 
மும்பை, சென்னை போன்ற நகரங்களில் அரசு மருத்துவமனைக்கு சென்று பலர் கருக்கலைப்பு செய்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, கருத்தரிக்கும் 1000 பெண்களில் 47 பேர் கருக்கலைப்பு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்