8 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து தீ வைத்த ராணுவ வீரர்!!

வியாழன், 7 டிசம்பர் 2017 (15:23 IST)
மியான்மரின் வடக்கு பகுதியில் வசித்து வரும் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவருகின்றனர். ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச்செல்கின்றனர்.
 
பெரும்பாலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 
 
இந்நிலையில், ராணுவத்தினரின் கோரமான தாக்குதல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரோஹிங்கிய முஸ்லிம் பெண் ஒருவர் இது குறித்து கூறியதாவது, நான் 8 மாத கர்ப்பிணியாக இருந்தேன். எங்கள் கிரமாத்திற்குள் நுழைந்த ராணுவ வீரர்கள் வீடுகளுக்கு தீவைத்து எரித்தனர். 
 
கிராமத்தில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்தனர். நான் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தும் என்னை பலாத்காரம் செய்தனர். என் கண் முன்னே எனது மூத்த மகைனையும் கொலை செய்தனர். எனது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரை இதுவரை நான் இழந்துள்ளேன். 
 
நான் இறந்துவிட்டதாக நினைத்து வீட்டிற்கு தீவைத்தனர். ஆனால், நான் தப்பித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். சமீபத்தில், ராணுவத்தினர் ராக்கைன் மாநிலத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்