கேரளா மலப்புரத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முஸ்லீம் மாணவிகள் 3 பேர் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக மாணவிகள் நடமானடியுள்ளனர். சிலர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக அவர்கள் உடை அணிந்திருப்பது கண்டிக்கத்தக்கது என கடுமையாக விமர்சனம் செய்ததோடு அப்பெண்களை மிரட்டவும் செய்தனர்.