இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே அவர் காங்கிரஸ் தவிர மற்ற தலைவர்களை பாராட்டி வருகிறார். குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பை மோடி சந்தித்ததை பாராட்டிய அறிக்கை வெளியிட்டார். அதேபோல், கேரளாவில் பினராயி விஜயனின் ஆட்சி நன்றாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.
இவ்வாறான சசிதரூரின் செயல்கள், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம், காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தவிர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி இருந்தாலும், அதே நேரத்தில் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.