உலக அளவில் உலுக்கிய கரூர் துயர சம்பவம்.. சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இரங்கல்..!

Siva

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (08:11 IST)
கரூரில் நடந்த துயர சம்பவம் தமிழகத்தை மட்டும் இன்றி இந்தியாவையே உலுக்கிய நிலையில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல இந்திய அரசியல்வாதிகள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில், கரூர் சம்பவத்திற்கு சீனாவிலிருந்து இரங்கல் வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் நடந்த விஜய் பரப்புரையில் 41 பேர் உயிர் இழந்ததற்கு, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
மேலும், அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக வேண்டுகிறோம் என்றும் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு சிறிய நகரத்தில் நடந்த நிகழ்வு உலகையே உலுக்கியுள்ளது என்பது இந்த இரங்கல் செய்தியில் இருந்து தெரியவந்துள்ளது.
 
மேலும், இந்தியாவில் உள்ள சீன தூதரகமும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது என்பதும், உயிரிழந்தவர்கள் யாரும் சீனாவை சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் இந்த இரங்கல் செய்தி சீனாவிடமிருந்து வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்