லண்டனில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையின் பீடத்தில் சில அவமதிப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது நேற்று கண்டறியப்பட்டது. இந்த செயலுக்கு லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. "லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையம், டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை அவமதிக்கப்பட்ட இந்த வெட்கக்கேடான செயலை ஆழ்ந்த வருத்தத்துடன் கடுமையாகக் கண்டிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், சிலையை மீண்டும் அதன் அசல் நிலைக்கு கொண்டுவர இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து ஒருங்கிணைத்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ஆம் தேதி, லண்டனில் உள்ள இந்த சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியும், காந்திக்கு பிடித்த பஜன்களை பாடியும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.