கரூர் துயர சம்பவம்.. தலைமறைவாக இருந்த தவெக மாவட்ட செயலாளர் கைது..

Siva

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (08:18 IST)
கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கரூர் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திண்டுக்கல் அருகே தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவரை கைது செய்த போலீசார் கரூர் அழைத்து வந்ததாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
கரூர் கூட்டத்திற்கு அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார் என்றும், திட்டமிடாத அவரது ஏற்பாடு காரணமாகத்தான் இத்தகைய துயர செயல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னரே அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறையினர் முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
 
இப்போது கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் சில தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்