என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்: நீதி கேட்டு பிரதமர் மோடிக்கு சிறுமி கடிதம்!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (19:47 IST)
கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், ஹரியானாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


 
 
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அந்த பள்ளியில் பணிபுரியும் கிளார்க் கரம்பிர் மற்றும் சுக்பீர் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சிறுமி பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் ஒன்றை எழுதி புகார் அளித்துள்ளார்.
 
அந்த மின்னஞ்சலில், பள்ளி அலுவலகத்தில் வைத்தே அவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். ஒருநாள் மாலை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற என்னை எனது நண்பர்கள் பலம் கொடுத்து இந்த குற்றவாளிகளுக்கு எதிராக போராட உதவினார்கள்.
 
எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறியிருந்தார் சிறுமி. இதனை பதிவு செய்த பிரதமர் அலுவலகம், அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க சோனிபெட் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட அந்த இரண்டு பள்ளி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்