அன்று இரவு தம்பதிக்கு முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது மணப்பெண்ணுக்கு குளிர்பானம் கொடுக்கப்பட்டது. அதை அருந்திய அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அதன்பின், கணவருக்கு பதிலாக ஒரு மந்திரவாதி மற்றும் மணமகனின் தம்பி ஆகியோர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், நடந்த உண்மையை அறிந்து கதறி அழுதுள்ளார். அப்போது, அவரின் கணவருக்குள் தீயசக்தி இருப்பதால், அந்த மந்திரவாதியின் ஆலோசனையின் பேரிலேயே இது நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கணவருடன் முதலிரவு நடந்திருந்தால் அன்று இரவே அவர் இறந்து போயிருப்பார் என மந்திரவாதி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, ஒரு வாரத்திற்கு பின், பாதிக்கப்பட்ட அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீரட்டில் உள்ள லாசரி கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.