அதன்படி தற்போது பிரதமர் மோடி சௌபாக்யா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவில் 18,000 வீடுகளில் மின்சார வசதி இல்லாமல் இருந்து வந்தது.
அதன்படி தற்போது 10,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் இலக்கு 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளும் மின்சாரம் வழங்குவது. மேலும் இந்த சௌபாக்ய யோஜனா ஏழை மக்கள் எளிதாக மின்சார வசதி பெற அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர், மருத்துவ வசதிகள் ஆகியவையும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின் இணைப்பை பெற்று கொள்ளலாம். இதற்காக ரூ.16,320 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.